அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா…?? பெண்களே இதோ உங்களுக்காக…!!!

அடர்த்தியான நீளமான கூந்தல் வேண்டுமா...?? பெண்களே இதோ உங்களுக்காக...!!!

  • செம்பருத்தி

செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிய பின்பு தலைக்கு தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

  • வெண்ணெய்

முடி செழிப்பாக வளர வாரத்துக்கு ஒரு முறை வெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தலைமுடியை கழுவினால் முடி நன்றாக வளரும்.

  • கசகசா

கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிப்பருப்பு மாவை கலந்து முடிக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குறையும்.

  • கற்றாழை

கற்றாழை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முடிக்கு தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

  • ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெயை சூடாக்கி அதில் ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஐ கலந்து முடிக்கு தேய்த்து வந்தால் முடி வளராத இடத்தில் கூட வளரும்.

  • வேம்பாளம் பட்டை

தேங்காய் எண்ணெயுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து அதில் வேம்பாளம் பட்டையை போட்டு 2 அல்லது 3 நாட்கள் வெயிலில் வைத்தால் எண்ணெய்யானது சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். இதை தினமும் தலைமுடிக்கு தேய்த்து வந்தால் முடி வேகமாக வளரும்.

  • ஆவாரம் பூ

ஆவாரம் பூ 100 கிராம்,வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு அரை கிலோ ஆகியவற்றை அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
இந்தப் பவுடரை குளிப்பதற்கு முன் பத்து நிமிடம் தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் முடி உதிர்வது நீங்கி முடி வேகமாக வளரும்.

  • கறிவேப்பிலை

தேங்காய் எண்ணெயுடன் கருவேப்பிலை இலைகளை சேர்த்து காய்ச்சி எடுத்த எண்ணையை தினமும் தடவி வந்தால் முடி கருகருவென வளரும்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg