சிங்கப்பூர் – புருனே சந்திப்பில் நடந்தது என்ன..???

சிங்கப்பூர் - புருனே சந்திப்பில் நடந்தது என்ன..???

சிங்கப்பூர்: சிங்கப்பூர் துணைப் பிரதமர் மற்றும் வர்த்தக,தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங், புருனேயின் நிதியமைச்சர் லியு குவாங்மிங்கை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிகள் குறித்து விவாதித்தார்.

இருவரும் இன்றைய சிக்கலான மற்றும் நிலையற்ற சூழலை சமாளிக்க,ஆசியான் மற்றும் எதிர்கால முதலீடு,வர்த்தக கூட்டாண்மை போன்ற பலதரப்பு தளங்களில் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

டிஜிட்டல் பொருளாதாரம், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, நிதி மற்றும் வேளாண் தொழில்நுட்பத்திலான வளர்ச்சி வாய்ப்புகள் பற்றி மலேசியா மற்றும் புருனே கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

கான் கிம் யோங் புருனேயில் உள்ள லோட்லி பொறியியல் நிறுவனத்தை பார்வையிட்டு, சிங்கப்பூர்–புருனே கூட்ட முயற்சியின் செயல்பாடுகளை அறிந்தார்.

முன்னதாக, அவர் புருனேயின் சுல்தான் போல்கியாவையும் சந்தித்து, பல தசாப்தங்கள் பரஸ்பர நம்பிக்கையுடன் கட்டமைக்கப்பட்ட நட்பையும் ஒத்துழைப்பையும் பாராட்டினார். எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதே அவரது முக்கிய நோக்கமாகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK