நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..??
தமிழ்நாட்டின் நீலகிரி பள்ளத்தாக்கில் ஊசி மலை பகுதியில் உள்ள காட்சிகள் அழகாக இருந்த காரணத்தினால் செங்கல்பட்டு வட்டாரத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற ஆடவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது தன்னைத்தானே புகைப்படம்(Selfie) எடுத்துக்கொள்ள முயற்சித்த போது அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார்.
இதனை அடுத்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையும் ராணுவ படையினரும் சமவெளிடத்திற்கு விரைந்து சென்று இரவு நேரம் முழுவதும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர் விழுந்து கிடந்த இடத்தை அடையாளம் கண்டு மீட்பு குழுவினர் அவரிடம் சென்று முதலுதவி வழங்கினர் ஆனால் பெரும் கற்களாலும் பள்ளத்தாக்கின் ஆழத்தாழும் சிவகுருநாதனை மீட்டு மேலே கொண்டு வருவதற்கு சற்று அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.