சிங்கப்பூர் விமான நிறுவனங்களின் கடந்த மாதத்தின் வளர்ச்சி என்ன??

சிங்கப்பூர் விமான நிறுவனங்களின் கடந்த மாதத்தின் வளர்ச்சி என்ன??

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த மாதம் (செப்டம்பர்) வளர்ச்சி குறித்து புள்ளி விவரங்களாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் பயணிகள் போக்குவரத்து மற்றும் சுமை காரணி இரண்டிலும் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பதிவு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்தை பொருத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 3.7% அதிகரித்துள்ளது. இது திறனின் அடிப்படையில் 2.5% அதிகரித்ததை விட அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

குழுவின் சுமை காரணி கடந்த மாதம் ஒப்பிடும்போது ஒரு சதவீத புள்ளி அதிகரித்து 87.1% உயர்ந்துள்ளது.

SIA மற்றும் SCOOT ஆகியவை முறையே புள்ளிவிவரங்களானது 86.2% மற்றும் 90.1% சுமை காரணிகள் உயர்ந்துள்ளது.

இரண்டு விமான நிறுவனங்களும் இணைந்து கிட்டத்தட்ட 3.4 மில்லியன் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது. ஆண்டு கணக்கில் ஒப்பிடும் பொழுது 8% அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புள்ளிவிவரத்தின்படி, குழுவின் பயணிகள் வளையமைப்பு 37 நாடுகள் மற்றும் இதர நாடுகளில் 129 இடங்களை உள்ளடக்கியுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆனது 78 இடங்களுக்கு விமானத்தில் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது.

ஸ்கூட் 73 இடங்களுக்கு விமானத்தில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

சரக்கு வலையமைப்பு 38 நாடுகள் மற்றும் இதர நாடுகளில் 133 இடங்களை உள்ளடக்கியுள்ளது.

கடந்த மாதத்தில்(செப்டம்பர்) ஏற்பட்ட டைஃபோன் புயலின் தாக்கத்தால் வழித்தடங்களில் குறைவாக செல்ல வழிவகுத்தது.