டிஜிட்டல் முறை இருந்தும்பழைய நடைமுறைக்கு ஏன் முன்னுரிமை..?

டிஜிட்டல் முறை இருந்தும் பழைய நடைமுறைக்கு ஏன் முன்னுரிமை..?

சிங்கப்பூர்:சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி எல்லைகளில் குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க QR குறியீடு முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டிருந்தும்,பல பயணிகள் இன்னும் பாரம்பரிய பாஸ்போர்ட் முறையையே பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரியில் உட்லேண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் QR அடிப்படையிலான அனுமதி அறிமுகமானாலும், அதன் பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

ICA தகவல்படி, பேருந்து பயணிகளில் 48% மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் 40% பேர் மட்டுமே QR முறையை பயன்படுத்தினர். கார் பயணிகளில் 69% மற்றும் லாரி ஓட்டுநர்களில் 85% பேர் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வயது அடிப்படையில், 21–50 வயதினரிடையே 70% பேர் QR முறையை பயன்படுத்தினாலும், 51 வயதுக்கு மேற்பட்டவர்களில் அந்த விகிதம் 50% ஆக குறைந்துள்ளது.

2026ல் தொடங்கவுள்ள தானியங்கி பயணிகள் அனுமதி அமைப்பு (APCS) மூலம் வாகனத்திலிருந்து இறங்காமலே சோதனைச் சாவடியைக் கடக்க முடியும் என ICA தெரிவித்துள்ளது. அதற்கு முன்பே, QR குறியீடு முறையைப் பயன்படுத்தத் தொடங்குமாறு பயணிகளை ICA வலியுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK