சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!!

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்..!! மருத்துவருக்கு சிறை தண்டனை..!!

சிங்கப்பூரில் அழகு சிகிச்சையின்போது EDTA எனப்படும் ஊசி போட்ட காரணத்தினால்
ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அந்த சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் மீது விஷம் கலந்து உயிரிழக்க காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த 31 வயதான லாவ் லி டிங்கிற்க்கு EDTA -வை மிக விரைவாகவும், அதிக செறிவிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர் செலுத்தியுள்ளார். அதனால் EDTA -வில் நச்சுத்தன்மை ஏற்பட்டு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் மரணம் நிகழ்ந்துள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணரான சான் பிங்கியி, EDTA ஊசி போட்ட உண்மையைப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பிற மருத்துவர்களிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

அந்த மருத்துவரின் நடத்தை மிகவும் வெறுக்கத்தக்கது எனவும் அது தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு சுயநலமான செயல் எனவும் தண்டனை வழங்கும் போது நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.

38 வயதான குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஆரம்பத்தில் தனது அலட்சியத்தால் மரணம் விளைவித்த குற்றசாட்டை மறுத்துள்ளார். ஆனால் காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பிறகு அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 2019 ஆண்டு இறந்தவர், தனது நெற்றியில் உள்ள மெல்லிய சுருக்கங்களைச் சரி செய்ய பிராஸ் பாஷாவில் உள்ள ரிவைவைல் மெடிக்கல் & எஸ்தெடிக்ஸ் சென்டருக்கு அழகு சிகிச்சை செய்வதற்காக சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் இறந்தவருக்கு EDTA -வை ஊசி மூலம் செலுத்தியதில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு பின்னர் அப்பெண் இறந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்களே முழுமையான காரணம் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதற்கு முன்னர் இறந்தவருக்கோ அல்லது பிற நோயாளிகளுக்கோ எந்தவித பாதிப்பும் இன்றி EDTA -வை அவர் வழங்கி இருந்தாலும் அது தண்டனையைக் குறைக்கும் ஒரு காரணியாக இருக்காது எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

EDTA உடன் தொடர்புடைய உயிருக்கு ஆபத்தான அபாயங்களை மருத்துவர் அறிந்திருந்த போதிலும் இறந்தவர் அந்த சிகிச்சைக்கு பொருத்தமானவர் என்பதை உறுதி செய்ய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை.

மருத்துவர் நோயாளி என்ற உறவில் நோயாளியின் வாழ்வும் மரணமும் மருத்துவரின் கைகளில் தான் உள்ளது. ஆனால் இந்த மருத்துவர் லாபத்திற்காக இறந்தவருக்கு தேவையற்ற மருந்துகளை வழங்கியுள்ளார் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.

எனவே இந்த மருத்துவருக்கு 18 மாதத் சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK