சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!!

சிங்கப்பூரில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் பரபரப்பு..!! கழிவறையில் சிக்கிய பெண்..!!

சிங்கப்பூர்: ஃபுல்லர்டன் ஹோட்டலில் கழிப்பறை போட்டு சிக்கிக் கொண்டதால் ஒரு பெண் உள்ளே மாட்டிக்கொண்டார். இந்த சம்பவத்தால் ஹோட்டலில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பெண்ணின் குரல் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் அதை எப்படி திறப்பது என்று அவருக்கு கற்றுக் கொடுத்தனர்.

டிக் டாக் பயனரான @valenciaaatan என்பவர் மே 4 – ஆம் தேதி ஒரு வீடியோ பதிவின் மூலம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் கழிப்பறையில் மாட்டிக் கொள்வது இந்த ஆண்டுக்கான தனது விருப்பப் பட்டியலில் இல்லை என நகைச்சுவையாக பேசி இருந்தார்.

கழிப்பறையில் மாட்டிக் கொண்டிருந்த போது கதவுக்கு வெளியே ஹோட்டல் ஊழியர்கள் மீட்புப்பணி வந்து கொண்டிருக்கிறது கவலைப்பட வேண்டாம் என அந்த பெண்ணிடம் ஆறுதல் கூறுவதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

அந்தப் பெண் தனது மோசமான அனுபவத்தை அந்த வீடியோவில் மிகவும் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். சுமார் 5 நிமிடங்கள் சிக்கிக்கொண்ட பிறகு அவர் கழிப்பறை அறையைக் கவனிக்கத் தொடங்கியுள்ளார். அங்குதான் இரவை கழிக்க வேண்டும் என்று வேடிக்கையாக கூறியவர் , கழிப்பறை காகிதத்தைப் போர்வையாகப் பயன்படுத்தலாம் என்று விளையாட்டத்தனமாக அதையும் ஆராய்ந்து பார்த்துள்ளார்.

பின்னர் தனது மின்னணு செல்லப்பிராணியான டமாகோட்சிக்கு உணவளித்தவர், குறைந்தபட்சம் நான் தனியாக இல்லை என்று அவருக்கு அவரை கூறி சிரித்துள்ளார்.

சிக்கிக்கொண்டு 10 நிமிடங்கள் கழித்து ஹோட்டல் பொறியியல் ஊழியர்கள் எனக்கு உதவ வந்துள்ளனர். கதவுக்கு வெளியே ஒரு குழுவினர் கூடி பேசிக்கொண்டிருந்ததாக அந்த பெண் அதில் கூறினார்.

இந்தக் கூட்டம் கலைந்த பிறகு ஹோட்டல் ஊழியர்கள் கதவை எவ்வாறு திறக்க வேண்டும் என்று வெளியில் இருந்து அந்த பெண்ணுக்கு வழிகாட்டி உள்ளனர். சிறிது நேரம் முயற்சிக்குப் பிறகு பூட்டு திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணும் பாதுகாப்பாக தப்பியுள்ளார்.

வெளியே வந்த அப்பெண் தான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகவும் இந்த சோதனையான காலகட்டம் முழுவதும் தொழில்முறையாக நடந்து கொண்ட ஹோட்டல் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

சம்பவ இடத்தில் 4 பாதுகாப்பு காவலர்கள் இருந்ததாகவும் அவரைக் காப்பாற்ற தேவைப்பட்டால் முழு பூட்டை உடைக்குமாறு பொறியாளர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தியதாகவும் இந்த பெண்ணுடன் ஹோட்டலுக்கு வந்த தோழிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண் இந்த சம்பவத்தை பத்துக்கு பத்து மதிப்பெண் தரும் ஒரு கழிப்பறை அனுபவம் என்று நகைச்சுவையாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோவை இணையவாசிகள் வேடிக்கையாக கண்டு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபுல்லர்டன் ஹோட்டல் கதவை திறப்பதற்கு விருந்தினர் எதிர்கொண்ட சிரமத்தை தங்கள் குழுவினர் அறிந்ததாகவும் உடனடியாக பதில் அளித்ததாகவும் தெரிவித்துள்ளது. பொறியாளர்கள் செயல்முறை முழுவதும் சிக்கிக்கொண்ட வாடிக்கையாளருடன் இருந்த பிரச்சனையைப்பாதுகாப்பாகவும் திறமையாகவும் தீர்த்து வைத்தனர் என்று கூறியுள்ளது.

முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகு கதவுப்பூட்டுகள் சரியாக செயல்படுகிறதா என்பது கண்டறியப்பட்டதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பூட்டடுகளை சரியான திசையில் திருப்புவது குறித்து பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் அறிவுறுத்தல்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ஹோட்டல் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK