விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனமானது சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பல இளைஞர்களிடம் பணம் பறித்து மோசடி செய்துள்ளனர்.
வேலை பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட பணத்தொகையை ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு இளைஞர்கள் கொடுத்துள்ளனர். டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ஒரு நபருக்கு 65 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தரவில்லை.
இந்த மோசடியில் சிக்கிய இளைஞர்கள் நேரில் சென்று டிராவல்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு பார்க்கும் போது பெரும்பாலும் பூட்டியே கிடந்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்தினுடைய உரிமையாளர்களும் தலைமறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திருவாரூர், தேனி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25 க்கும் மேலாக இளைஞர்கள் ஏமாறியதை அடுத்த விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.
ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்து விட்டனர். அதற்கு மாறாக கடலூருக்கு சென்று புகார் கொடுக்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். அதனை அடுத்து இளைஞர்கள் கடலூருக்கு சென்று புகார் கொடுத்த நிலையில் விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் இளைஞர்கள் விருத்தாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு பார்ப்பதற்காக சென்றபோது அதிகாரி இல்லாததால் அவரை செல்போன் என்னை பயன்படுத்தி தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவ்வப்போது அவர் ஜனவரி 24, 2026 புகார் கொடுக்க வருமாறு கூறியிருந்தார்.
இளைஞர்கள் இது குறித்து கூறியதாவது: சிங்கப்பூரில் வேலை கிடைக்கும் என்றால் நம்பிக்கையில் தான் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணத்தை கொடுத்தோம். ஆனால் அந்த நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுக்காமல் பல லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டனர்.
இதனால் பணத்தை இழந்த நாங்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளோம். ஏமாற்றமடைந்த பணத்தை ஆவது திரும்ப வாங்க வேண்டும் என்ற நம்பிக்கையில் போலீஸ் இடம் புகார் கொடுக்க வந்தால் அவர்களும் புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள்.
தயவுகூர்ந்து இந்த பிரச்சனையை உயர் அதிகாரிகள் கண்டு நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.