சிங்கப்பூரில் 1,500 பேருக்கு அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 1,500 பேருக்கு அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன..??

சோதனை கடந்த ஆண்டு(2025) நடைபெற்றது.

இந்த சோதனையின் பது விரைவு சாலையில் பொருத்தப்பட்ட வேக கண்காணிப்பு கேமராவில் 80 km என்று பொருத்தப்படாமல் தவறுதலாக 70 கிலோமீட்டர் என பொருத்தப்பட்டு விட்டது.

இதனால் தவறுதலாக வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டியதாக கிட்டத்தட்ட 1,500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தவறான சோதனையானது சென்ற ஆண்டு (2025) அக்டோபர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை நடந்துள்ளது.

அவ்வப்போது தவறான வேகவரம்பு பொருத்தப்பட்டது டிசம்பரில் (2025) சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு அந்த தவறானது உடனே சரி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையும் ஆணையமும் தெரிவித்திருந்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற வேக கண்காணிப்பு கேமராக்களும் அனைத்து இடங்களிலும் சோதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தவறு குறித்து பாதிக்கப்பட்ட வாகனம் ஓட்டிகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட தேவையில்லை எனவும் போக்குவரத்து காவல்துறையே அவர்களை தொடர்பு கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் singapore police force feedback தளம் வழியாக போக்குவரத்து காவல்துறையை தொடர்பு கொண்டு மேற்கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

பாதிக்கப்பட்ட வாகனம் ஓட்டிகளுக்கு அவர்கள் செலுத்திய அபராதம் திரும்ப கொடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் காவல் துறையும், நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்திருக்கிறது.

இந்த தவறுக்காக போக்குவரத்து காவல் துறையும் ஆணையமும் மன்னிப்பு கோரி உள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK