மும்பை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்..!!
மும்பை சத்திரபதி சிவாஜி மஹராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் முயற்சியை இந்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு (DRI) தடுத்து நிறுத்தியுள்ளது.
ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று(31.12.25) பஹ்ரைனிலிருந்து வந்த பயணி ஒருவர் அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டார்.
தங்கம் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.