சிங்கப்பூரில் 6 இணையதளங்கள் முடக்கம்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 6 இணையதளங்கள் முடக்கம்..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 6  போலி செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் செய்தி இணையதளங்கள் போல் தோற்றம் அளிக்கும் 6 போலி இணையதளங்களை வெளிநாட்டு சக்திகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், உள்ளூர் மக்களின் கருத்தைப் பாதிப்பதற்கும் பயன்படுத்தக் கூடும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA)இணைந்த ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த இணையதளங்களை தடுக்கவும் உள்ளூர் பயனர்கள் அவற்றில் அனுப்புவதை தடை செய்யவும், உள்ளூர் இணையைச் சேவை வழக்குநர்களுக்கு அதிகாரிகள் அறுவறுத்தி இருக்கின்றன.

அந்த 6 இணையதளங்கள்: Singaporeheadline.com, singaporeweek.com, Singapore24hour.com, Nanyangweekly.com, Singaporebuzz.com மற்றும் sgtimes.com ஆகும்.

இந்த போலியான இணையதளங்கள் குறித்து 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கு இடையில் தகவல் தெரிய வந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இணையதளங்கள் தங்களை இணையதள முகவரிகள், பக்க வடிவமைப்புகள் மற்றும் வெளியடப்பட்ட உள்ளடக்கங்கள் போன்றவற்றை சிங்கப்பூர் தொடர்பான  செய்தித் தளங்களிக்க காட்டிக் கொண்டு, முறையான உள்ளூர் ஊடகங்கள் என்று வாசகர்களை நம்ப வைத்துள்ளன.

முதல் 5 இணையதளங்களும் முன்னர் ஒரு சர்வதேசப் பாகுப்பாய்வு நிறுவனத்தால் எச்சரிக்கப்பட்டு இருந்த மோசடி இணையதளங்களில் வலையமைப்புடன் தொடர்புடையவை. அவை ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல் உண்மையான செய்தி இணையதளங்களைப் போலவே தோற்றம் அளிப்பதற்காக நகரும் செய்திகள் மற்றும் பிரபலத் தலைப்புகள் போன்ற அம்சங்களை சேர்த்து ஜூன் 2025 தேர்தலின் போது மறுவடிவமைப்பும் செய்யப்பட்டன.

இந்த இணையதளங்களில் உள்ள சிங்கப்பூர் செய்திகளில் பெரும்பாலானவை சேனல் நியூஸ் ஏசியா, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்,  மதர்ஷிப், ப்ளும்பெர்க் மற்றும் பிசினஸ் இன்சைடர் போன்ற ஊடக நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டதாக தோன்றினாலும் அவை அந்த இணையதளங்களில் அசல் செய்திகளாக முன்வைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த இணையதளங்களை முடக்குவது மக்களின் பொது நலன் கருதியே என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் . 2024 ஆம் ஆண்டு அக்டோபர் ஒளிபரப்பு சட்டத்தின் கீழ் வெளிநாட்டு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட 10 மோசடி இணையதளங்களை அரசாங்கம் முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் உள்ளடக்கங்களை பார்வையிடும் போது விழிப்புடன் இருக்குமாறும்,  இந்த போலி வலைத்தளங்களையும் அவை ஏற்படுத்தக்கூடிய அபாயங்கள்  குறித்தும் பொதுமக்களுக்கு அரசாங்கம் நினைவூட்டி உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK