சிங்கப்பூரில் பேத்திகளை பாலியல் தொந்தரவு செய்த 64 வயது நபர்..!! தண்டனை கிடைத்ததா..??

சிங்கப்பூரில் பேத்திகளை பாலியல் தொந்தரவு செய்த 64 வயது நபர்..!! தண்டனை கிடைத்ததா..??

சிங்கப்பூரில் 64 வயதான தாத்தா ஒருவர் அவரது பேத்திகளை பாலியல் தொந்தரவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

64 வயதைச் சேர்ந்த நபர் அவரது இரண்டு பேத்திகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் நபருக்கு தனது பேதிகள் மீது பாலியல் உணர்வுகள் ஏற்பட தொடங்கியுள்ளது அக்க காரணத்தினால் அவர் வேண்டுமென்றே இரண்டு சிறுமிகளையும் தனித்தனியாக அனுகி விளையாடுவதற்காக அருகே அமரச் சொல்லின் அறிவுறுத்தி அவர்கள் கவன சிதறலில் இறந்த பொழுதும் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

9 முதல் 10 வயதிற்கு உட்பட்ட மூத்த பேத்தியை, மார்பகங்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். 8 முதல் 9 வயதிற்கு உட்பட்ட இளைய பேத்தியையும் அவரது பிறப்புறுப்புகளில் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில் இளைய பேத்தி அவரது தாத்தாவின் செயல்கள் குறித்த இந்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் ஒரு சமூக சேவகரிடம் தெரிவித்த நிலையில் இந்த தவறு அம்பலமாகியது.

அதன் பிறகு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. சிங்கப்பூர் சட்டத்தின்படி 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான தகாத தாக்குதல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை பிரம்படி அபராதம் அல்லது இந்த தண்டனைகளின் ஏதேனும் ஒரு கலவை விதிக்கப்படும்.

குற்றவாளியும் அதில் பாதிக்கப்பட்டவரும் ஒன்றாக வாசிக்கின்ற நெருங்கிய உறவினர்கள் என்பதால் அவர்களுக்கான தண்டனை இரட்டிப்பாக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் அதிகரிக்கப்படும்.

இந்நிலையில் பாலியல் ரீதியாக இரண்டு பேத்திகளை தொடர்ச்சியாக துன்புறுத்திய காரணத்திற்காக சிங்கப்பூரில் 64 வயதான தாத்தா ஒருவரை கைது செய்து அவருக்கு நீதிமன்றத்தில் 62 மாதங்கள் மற்றும் நான்கு வாரங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK