சிங்கப்பூரில் AI பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்..!!
சிங்கப்பூரில் உள்ள Marina Square வணிக வளாகத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணிபுரிந்த அரவிந்திரன் என்பவர் அந்த நிறுவனத்தின் Referrel திட்டத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.
ChatGPT மூலமாக போலி தொலைபேசி எங்களை உருவாக்கி, மே 2024 முதல் ஏப்ரல் 20 25 வரை, சுமார் 2172 போலி உறுப்பினர் கணக்குகளை அரவிந்திரன் தொடங்கியுள்ளார்.
அவர் தனது மேலதிகாரியின் கணினி தரவுகளை பயன்படுத்தி OTP பெண்களை திருடி சுமார் 28 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான இ-வவுச்சர்களை பெற்று அவரின் சொந்த தேவைகளுக்காக செலவழித்துள்ளார்.
ஆனால் பல கணக்குகள் ஒரே ஒரு Device ID இல் இருந்து செயல்படுவதை கண்டுபிடித்த நிறுவனம் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.
அதன்படி விசாரணையின் போது அரவிந்திரன் மோசடி குற்றத்தில் சிக்கியுள்ளார். இதற்காக இவருக்கு ஒரு வருடம் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.