இணையத்தில் வீடியோ வெளியிட்ட சீன நபர் மீது சட்ட மீறல் சந்தேகம்..!!! காரணம்..??

இணையத்தில் வீடியோ வெளியிட்ட சீன நபர் மீது சட்ட மீறல் சந்தேகம்..!!! காரணம்..??

சிங்கப்பூர்: மலேசிய சோதனைச் சாவடியில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் படம்பிடித்து, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக ஒரு சீன நபர் சந்தேகிக்கப்படுகிறார்.இந்தச் செயல் உள்கட்டமைப்பு பாதுகாப்புச் சட்டத்தை மீறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 18ஆம் தேதி,அந்த நபர் டூயின் (Douyin) தளத்தில் ஒரு காணொளியைப் பதிவேற்றியுள்ளார். அதில், “சிங்கப்பூரில் தரையிறங்கிய பிறகு சுங்கத்துறையினர் என்னை ஒரு சிறிய இருண்ட அறையில் தடுத்து வைத்தனர்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவர் வெளியிடப்பட்ட வீடியோவில், சோதனைச் சாவடிக்குள் உள்ள ஒரு அறையில் அமர்ந்திருப்பதும், சுற்றுப்புறங்களைப் படம்பிடிப்பதும் காணப்படுகிறது. சிரித்தபடி பேசும் அவர், சிங்கப்பூரில் தரையிறங்கியதும் சுங்கத்துறையால் அந்த அறையில் வைக்கப்பட்டதாக கூறுகிறார்.

அந்த அறையில், அவருக்கு அருகில் நீல நிற சட்டை அணிந்த மற்றொரு ஆண் அமர்ந்திருந்ததாகவும், கண்ணாடி ஜன்னலின் வெளியே சில பெண்கள் காத்திருந்ததாகவும் வீடியோவில் தெரிகிறது. மேலும், அந்த அறையின் சுவர்களில் புகைப்படம் எடுப்பதைத் தடைசெய்யும் அறிவிப்புப் பலகைகளும் இருந்தன.

உள்கட்டமைப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லது பாதுகாக்கப்பட்ட இடங்களில், அல்லது அவற்றைச் சுற்றி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுப்பது சட்டவிரோதமானதாகும்.

இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு $20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK