அதிர்ச்சி..!! பிஞ்சுக் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து..!!

அதிர்ச்சி..!! பிஞ்சுக் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று(06.02.26)காலை சவுத் பிரிட்ஜ் சாலையில் ஒரு வாகனம் மற்றும் இரண்டு பாதசாரிகள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்து நடந்தது.

இந்த விபத்தானது காலை 11:50 மணியளவில் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு வயது சிறுமி மற்றும் 31 வயது பெண். இருவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் ஆறு வயது சிறுமி காயங்களால் பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநரான 38 வயது பெண், தற்போது போலீசாரின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

போலீசார் கூறியதாவது, விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், விபத்தின் காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆராயப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அதிகாரிகள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும்,சாலைகளில் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்குமாறு எச்சரிக்கின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK