எச்சரிக்கை..!!!ஆன்லைனில் விற்கப்படும் இந்த பொருட்களை வாங்க வேண்டாம்..!!

எச்சரிக்கை..!!!ஆன்லைனில் விற்கப்படும் இந்த பொருட்களை வாங்க வேண்டாம்..!!

சிங்கப்பூர்:மருத்துவ மேற்பார்வை இல்லாமல் எடை இழப்பு அல்லது தசை அதிகரிப்புக்காக பெப்டைட் ஊசி தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம்) பொதுமக்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைனில் விற்கப்படும் சில பெப்டைட் தயாரிப்புகள் பதிவு செய்யப்படாத மருந்துகள் என்றும், அவை கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில விற்பனையாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிக் டாக்,வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம் ஊசி மூலம் செலுத்தக்கூடிய பெப்டைடுகளை விற்பனை செய்து வருகின்றனர். “விரைவில் கொழுப்பை எரிக்கும்”, “தசையை வேகமாக வளர்க்கும்” என விளம்பரப்படுத்தி, மருத்துவரின் பரிந்துரை இல்லாமலும் இவை கிடைக்கின்றன என கூறப்படுகின்றது.

இந்த தயாரிப்புகளை வாங்குவது மிகவும் எளிதானதாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு செய்தி அனுப்பி, கட்டணம் செலுத்தி, குறுகிய காலத்தில் வீடு தேடி விநியோகம் பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தயாரிப்புகள் S$80 விலையில் விற்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அவை மலேசியா மற்றும் சீனாவிலிருந்து வந்தவை என சில விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் விளக்கமளித்ததாவது, ஆன்லைனில் விற்கப்படும் இந்த பெப்டைட் பொருட்கள் நாட்டில் பதிவு செய்யப்படாதவை.
ஆகவே அவை சட்டவிரோதமானவை. அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் பதிவுகள் மற்றும் விற்பனைத் தகவல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியியல் துறை தலைவர் டாக்டர் கூ சின் மெங், இந்த தயாரிப்புகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடினம் என தெரிவித்துள்ளார். மேலும் டி-ஸ்குவேர்ட் ஹெல்த் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஹிஷாம் பதருதீன், பெப்டைட்களின் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும் என்றும், பல தயாரிப்புகள் இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளதால் அவற்றின் நீண்டகால பாதுகாப்பு குறித்து உறுதி செய்ய முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும், குறிப்பாக ஆன்லைனில் விற்கப்படும் பதிவு செய்யப்படாத ஊசி மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK