2025 இல் குற்றங்கள் அதிகரிப்பு: காரணம் என்ன?

2025 இல் குற்றங்கள் அதிகரிப்பு: காரணம் என்ன?

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2025) குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவு வெளியாகி உள்ளது.

இதற்குக் காரணம் என்ன?
சிங்கப்பூரில் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் கற்பழிப்பு மானபங்க சம்பவங்கள் ஆகும்.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் 479 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளனர். ஆனால் இதற்கு முந்தைய ஆண்டான 2024 இல் பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 401 ஆகும்.

மானபங்க சம்பவங்களின் எண்ணிக்கையும் 2024 இல் பதிவான 1427 இல் இருந்து சென்ற ஆண்டு 1531 அதிகரித்து இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இணையம் இல்லாத மற்ற குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டு 1,969 ஆக இருந்து தற்போது 2025 இல் 20,857 ஆக உயர்ந்துள்ளது என்று காவல்துறை நேற்று (பிப்ரவரி 24) அதன் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த குற்றச்சம்பவங்களில் 20% திருட்டு சம்பவங்களை குறிக்கிறது.

மானபங்க சம்பவங்கள் கவலைக்குரிய அளவில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகள் பொது கேளிக்கை விடுதிகள் மற்றும் குடியிருப்பு இடங்கள் ஆகியவற்றில் தற்பொழுது மானபங்க சம்பவங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து இருக்கிறது. ஆனால் பேர் அங்காடிகளில் அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

மறைந்திருந்து தகாத படங்களை எடுக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டு சற்று குறைந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK