சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார்.

தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு பதிலாக விக்ரம் துரைசாமி அவர்கள் அந்தப் பொறுப்பை பொறுப்பை ஏற்க உள்ளார்.

விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டதை அடுத்து சீனா அவரை வரவேற்றுள்ளது. இது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான், “இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்கு தூதர்கள் ஒரு முக்கிய பாலமாக உள்ளனர் அவர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சீனா வழங்கும்” என்று கூறியுள்ளார்.

விக்ரம் துரைசாமி தனக்கென “வெய் ஜியாமெங்” என்ற சீன பெயரை தேர்ந்தெடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மாண்டரின் மொழியில் இந்த பெயருக்கு “சிறந்த கூட்டணியை உருவாக்குபவர்” அல்லது “புகழ்பெற்ற பங்காளி” என பொருள்படும்.

சீனாவில் தூதராக உள்ளவருக்கு அந்நாட்டினுடைய மொழியில் பெயர் சூட்டுவது ஒரு அரச தந்திர உறவிற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு நடந்த மோதலுக்கு பிறகு இந்தியா சீனா இடையேயான உறவானது தற்போதைய இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் சீன விவகார நிபுணர் ஒருவர் அந்த நாட்டுக்கு தூதராக நியமிக்கப்பட்டுள்ளது அனைத்து உலக அளவில் ஒரு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK