வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!!
சன் குரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஆகியவை ஒன்று சேர்ந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தச் செய்தியை SIA நிறுவனம் ஒரு கூட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.
வியட்நாமிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சன் க்ரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் (SIA) ஒன்றிணைந்து முதல்முறையாக வியட்நாமில் இருக்கும் ஃபூ குவோக் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக நேற்று முன் தினம் (மார்ச் 21) அன்று ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன் பின்னணியாவது: ஃபூ குவோக் சர்வதேச விமான நிலையத்தை சுற்றுலா சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை உள்ளடக்கிய திட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் விமான நிலைய செயல்பாடுகளை மேம்படுத்துதல் விமான இணைப்பு மற்றும் சேவை தரத்தை உயர்த்துவது மற்றும் வணிகத் திட்டங்கள் மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வழங்கும்.
இதன் மூலமாக, ஃபூ குவோக் சர்வதேச விமான நிலையம் 2027 ஏபெக் உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவே உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு உரித்தான உலகத்தரம் வாய்ந்த சேவைத்தரங்களையும், தடையில்லா பயண அனுபவங்களையும் வழங்கும் ஒரு சுற்றுலா தளமாக மாற்றப்படும்.
சமீப ஆண்டுகளாக சர்வதேச விமான நிலையம் ஆனது விரைவான வளர்ச்சியை அடைந்து வரும் சூழலில் கடந்த ஆண்டு(2025) சுமார் 6 மில்லியன் பயணிகள் பயணம் செய்த சாதனை படைத்திருக்கிறது. இந்தச் சாதனை அளவிலான சர்வதேச விமானங்களையும் அதிக அளவில் இயக்கியுள்ளது.
இத சர்வதேச சந்தைகளின் வலுவான தேவையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த முதன்மை திட்டத்தில் ஒரு புதிய ஊடுபாதை மற்றும் இரண்டாவது முனையம், ஆகியவற்றின் கட்டுமானம் குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதை கட்டி முடிக்கப்பட்டதும் ஆண்டிற்கு 24 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் எதிர்பார்க்கப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்டகால அடிப்படையில் 50 மில்லியனாக விரிவாக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக கிடைக்கும் ஒத்துழைப்பில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா மையமாக வியட்நாமில் இருக்கும் ஃபு குவோக் சர்வதேச விமான நிலையத்தின் நிலையை மேலும் வலுப்படுத்த முடியும்.