சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் CO2 வாயு வெளியேற்றத்தைக் குறைக்க புதிய திட்டம்..!!

சிங்கப்பூரில் கரியமில வாயு (CO2) வெளியேற்றமானது அதிகரித்து வருவதால் அதனை குறைக்க $250 மில்லியன் மதிப்புடைய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு “SPEED” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது அலுவலகம், ,தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் கவனம் செதலுப்படும்.

மேலும், இது எரிசக்தி சந்தை ஆணையம் (EMRA), பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயல்படும்.

இந்த திட்டமானது சூரிய சக்தி, காரியமில வாயு சேமிப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு போன்ற தொழில்நுட்பங்களுக்கான திட்டமாகும்.

முன்னோட்டத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு சிங்கப்பூர் பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும், அதை மேலும் வலுப்படுத்த இந்த திட்டம் உதவும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உள்ளூர் வணிகங்களும் தொழில்நுட்ப வழக்குநர்களும் இந்த திட்டத்தின் மூலம் கூட்டமைப்புகளை ஏற்படுத்தி, வளர்ந்து வரும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK