சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..??

சிங்கப்பூர்: ஹௌகாங் சாலையில் நடந்த ஒரு விபத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இது குறித்து புகைப்படங்களை “சிங்கப்பூரா சேனல்” என்ற முகநூல் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படங்களின் மூலம் ஒரு மிதிவண்டி ஓட்டுநர் வரிக்குதிரை கடக்கும் பாதையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஒரு வெள்ளி நிற செடான் கார் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படங்களின் மூலமாக மிதிவண்டி ஓட்டுநர் காரின் உடைய முன் பக்கத்தின் மீது தூக்கி வீசப்பட்டு பின்னர் சாலையில் பலமாக விழுந்தது தெரிகிறது.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேற்கொண்ட விசாரணையின் போது, ஹௌகாங் அவன்யூ 8 மற்றும் ஹௌகாங் அவென்யூ 6-ஐ இணைக்கின்ற ஒரு சாலையில் நேற்று (ஏப்ரல் 12) காலை சுமார் 11.50 மணியளவில் விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

51 வயதைச் சேர்ந்த மிதிவண்டி ஓட்டுநர் விபத்து ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் 60 வயதைச் சேர்ந்த கார் ஓட்டுனர் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளார்.

டான் டோக் செங் மருத்துவமனைக்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK