சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

சிங்கப்பூர்: பொங்கோல் நடைப்பயிற்சி பூங்காவில் ஒரு சிறுவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். இது குறித்த காணொளி பதிவை “சிங்கப்பூரில் அமண்டா டீச்சர்” என்ற பெயரை உடைய ஒரு இணையவாசி சியாவோஹாங்ஷுவில் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளி பதிவில் தூண்டிலில் ஒரு பெரிய அளவிலான மீன் சிக்கிக்கொண்டதும் நீரிலிருந்து மேல் வருவதும் அதை கரையில் அடர் நீல நிற சட்டை அணிந்த அந்த சிறுவன் கயிறை பிடித்து இறுக்குவதும் பதிவாகியுள்ளது.

பின்னர் அந்த மீனை பிடித்த எழுப்பதற்கு அந்த சிறுவனுடன் இரண்டு பெரியவர்கள் சேர்ந்து சிறிது நேரம் கழித்து, போராடி அதை கரைக்கு இழுத்து வந்தனர்.

இதைக்கண்ட நெட்டிசன் ஒருவர், இந்த அதிர்ச்சியான காட்சியானது நேற்று (ஏப்ரல் 12) மாலை சுமார் 7 மணி அளவில் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டு இறந்த சமயத்தின் போது கண்டதாக கூறியுள்ளார்.

மேலும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது சிங்கப்பூரின் சூழலியல் இவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மீன்களை இவ்வளவு பெரிய அளவிற்கு எவ்வாறு இங்கு வளர்க்க முடிந்தது? என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

மேலும் ஒரு இணையவாசி அச்சிறுவனின் நீளத்தில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு நீளமுள்ள அந்த கெளுத்தி மீனுக்கு அருகில் அவன் படுத்திருந்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த மீன் இறுதியில் மீண்டும் ஏரியிலேயே விடப்பட்டதாக இணையாவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த காணொளி பதிவானது வைரல் ஆகி வந்த நிலையில் இணையவாசிகளிடமிருந்து பல கருத்துக்கள் வந்துள்ளன. இது போன்ற வகை மீன் பிடித்தல் சட்டபூர்வமானதா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த பூங்காவில் மீன் பிடிப்பதற்கு என்று இரண்டு பகுதிகள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்று இன்று கண்டறியப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK