சேதமடைந்த பைபர் ஆப்டிக் கேபிள் காரணமாக பேருந்து உத்தேச வருகை நேரம் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இது வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள சில பயனர்களின் பிராண்ட்பேண்ட் நெட்வொர்க் சேவைகளையும் பாதிப்புக்குள்ளாகியதாகவும் LTA தெரிவித்துள்ளது.
சேதமடைந்த பைபர் ஆப்டிக் கேபிள் தொலைத்தொடர்பு சேவையில் இடையூறுகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்துவதால் ETA அமைப்பில் சிரமங்கள் ஏற்படுவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதற்குப்பின் இன்று (ஏப்ரல் 19) காலை பாதிக்கப்பட்ட பைபர் ஆப்டிக் சேவைகள் சரி செய்யப்பட்டதாகவும், பேருந்து உத்தேச வருகை அமைப்பானது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)அறிவித்திருக்கிறது.
இன்று (ஏப்ரல் 19) காலை 11 மணி அளவில் இந்த சம்பவத்தின் போது பேருந்து சேவைகள் சாதாரணமாக இயங்கிதாகவும், அதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் LTA தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
பைபர் ஆப்டிக் கேபிள் பழுது பார்க்கும் பணியின் போது பயணிகளின் பொறுமையையும், புரிதலையும் பாராட்டுவதாகவும், இது போன்ற சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு இந்த சம்பவம் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் எனவும் அந்த பதிவில் LTA குறிப்பிட்டிருந்தது.