நீதித்துறையை விட்டு விலகும் இளம் வழக்கறிஞர்கள்..!! காரணம் என்ன..??

நீதித்துறையை விட்டு விலகும் இளம் வழக்கறிஞர்கள்..!! காரணம் என்ன..??

கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீதித்துறையில் இருந்து 30% பேர் இளம் வழக்கறிஞர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

காரணம்:
அதிக வேலை, போதிய வழிகாட்டுதல் இல்லாதது மற்றும் மோசமான பணிச்சூழல்

இரண்டு முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்கள்:
AI இன் அதிவேக வளர்ச்சி
சட்டத்துறைச் சூழல் நிலைத்திருக்கும் என்ற நிலையில் சிக்கல்

இந்த தகவல்களை புதிய வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் கழகத்தில் சேரும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டும் போதாது அதற்குண்டான பொறுப்பு தெளிவு நேர்மை போன்ற பண்புகளை வளர்ப்பது முக்கியம்.

தொழில்நுட்பம் வளர்ச்சியின் காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது இதன் நெருக்குதலுக்கு ஈடு கொடுத்து நன்னெறிகள் நிலைத்து நீடிக்கிறதா என்பதுதான் தற்போதைய கேள்வி என்று திரு மேனன் கூறியுள்ளார்.

எனவே இளம் வழக்கறிஞர்களை முறையாக எப்படி தயார் படுத்துவது என்பதை முதலில் திட்டமிட வேண்டும் எனவும் ஆய்வு செய்வது போன்ற அன்றாட வேலைகள் முன்பு இளம் வழக்கறிஞர்களுக்கு அடிப்படை பயிற்சியாக கற்றுத் தர வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.

செயற்கையில் நுண்ணறிவின் வளர்ச்சியால் ஆரம்ப நிலை வேலைகள் சற்று மாற்றமாகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK