PMA பயனர்கள் கவனத்திற்கு: மருத்துவச் சான்றிதழ்கள் சமர்ப்பிப்பது கட்டாயம் ..!!
சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஜூன் 1ஆம் தேதி புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது PMA -க்களை பயன்படுத்துவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதற்காக பிப்ரவரி மாத இறுதி முதல் 500க்கும் மேற்பட்ட PMA பயனர்கள் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
PMA மற்றும் PMD-களுக்கான விதிமுறைகள் ஜூன் மாதம் முதல் கடுமையாக்கப்படும் எனவும், PMA பயனர்கள் மருத்துவ சான்றிதழ்களைச் வைத்திருக்க வேண்டும் எனவும் LTA குறிப்பிட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று LTA பயனர்களுக்கு நினைவூட்டி உள்ளது.
ஜூன் 1ஆம் தேதி விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பு, PMA பயனர்கள் LTA – விடம் மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் எனவும், தங்கள் சார்பாக மதிப்பீட்டு முடிவுகளைச் சமர்ப்பிக்குமா என்பதைத் தாங்கள் மருத்துவ .நிலையங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பயனர்களிடம் LTA கூறியுள்ளது.
அவ்வாறு இல்லை எனில் பயனர்கள் தங்கள் மருத்துவச் சான்றிதழ்களை ஆன்லைனில் https://go.gov.sg/ pma-self என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பயனர்கள் மருத்துவச் சான்றிதழில் விண்ணப்ப நிலையை அல்லது மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதை LTA-வின் “One Motoring” என்ற இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் மற்றும் குறிப்பிட்ட அரசாங்க ஊனமுற்றோர் மற்றும் நடமாடும் உதவித் திட்டங்களின் பயனாளிகள் இந்த மருத்துவச் சான்றிதழ்கள் பெற தேவையில்லை.
ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்து மின்சார தனிநபர் நடமாடும் உதவிக் சாதனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 10 கிலோமீட்டர் என்பதிலிருந்து 6 கிலோ மீட்டராக குறைக்கப்பட உள்ளது.
அனைத்து PMA -க்களும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். 70 சென்டிமீட்டர் அகலம், 120 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 150 cm உயரத்தை மீறும் அல்லது 300 kg எடை கொண்ட PMAக்கள் நடைபாதைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர்கள் பதிவு செய்யப்பட்ட PMA-களை மட்டுமே விற்க முடியும். பதிவு செய்யப்படாத PMA -களை விற்பனை செய்தால் $20,000 வரை அபராதம் மற்றும் 24 மாத சிறைத் தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என விற்பனையாளர்களுக்கும் LTA அறிவுறுத்தியுள்ளது.