சிங்கப்பூர் : வெய்லின் தொடக்கப் பள்ளிக்கு வெளியே உள்ள பாதசாரிகள் நடைபாதை தற்காலிகமாக மூடப்பட உள்ளது.
ஜுரோங் மின்வழித்தடத் திட்டத்தின் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளுக்காக வெஸ்ட்வுட் வெளியே உள்ள சிக்னல் பொருத்தப்பட்ட பாதசாரி நடைபாதை தற்காலிகமாக மூடப்படும் என்று மேற்கு GRC – யின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹோமிங் அவர்கள் நேற்று (ஏப்ரல் 26) முகநூல் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
குடியிருப்பாளர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை வேலையில் சேர்க்க உள்ளதாகவும் டாக்டர் ஹோ தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் மற்றும் பள்ளிக்கு சென்று வருவதற்கான எளிதான அணுகல் குறித்து கவலைப்படுவதால், பள்ளியின் பின் வாசல் தொடர்ந்து திறந்து இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் அதிகாரிகளுடனும் பள்ளியிடனும் கலந்து ஆலோசித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .
பள்ளி குழந்தைகளின் அன்றாட வாழ்வில் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க விரும்புவதாகவும், பாதசாரிகள் நடக்கும் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) ஒப்பந்தக்காரர்கள், போக்குவரத்தை நிர்வகிக்கவும் மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வழிகாட்டவும் மாற்று பாதுகாப்புக்கான பாதசாரி வழிகளை வழங்கவும் மூடப்பட்ட பகுதிகள் எப்பொழுதும் இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் குடியிருப்பாளர்கள் தங்கள் பயண வழிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளாார்.
மேலும் குடியிருப்பாளர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் LTA தொழிலாளர்களை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் குடியிருப்பாளர்களின் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளாார்.
இந்த மின்வழித்தடத் திட்டத்தால் எதிர்காலத்தில் ஜூரோங் பகுதியில் வசதியான போக்குவரத்து அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.
பாதசாரிகள் நடைபாதை ஏப்ரல் 25ஆம் தேதி முதல் டிசம்பர் வரை தற்காலிகமாக மூடப்படும்.