சிங்கப்பூர் MRT நிலையத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நபர்..!! எதற்காக..??
சிங்கப்பூர்: டோபிகாட் MRT ரயில் நிலையத்தில் பெண்களைத் தவறாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் நபர் மே 15ஆம் தேதி அன்று மாலை பொதுமக்களால் பிடிபட்டுள்ளார்.
அந்த நபர் வேண்டுமென்றே துன்புறுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார். அதனால் 30 வயதான அந்த நபரிடம் காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட காணொளிகளின் படி ஒருவர் நகரும் படிக்கட்டில் வேகமாக இறங்கி வடகிழக்கு வழித்தட நடைமேடை நோக்கி ஓடி உள்ளார். அப்போது பொதுமக்கள் அவரை நிறுத்துங்கள் இந்த நபர் ஒரு பெண்ணை படம் பிடித்து இருக்கிறார் என்று யாரோ ஒருவர் கத்துவது அந்த காணொளியில் கேட்கிறது.
பிறகு அங்குள்ள ஒரு பெண் அவரை காமவெறி பிடித்தவன் என்று கூறியதும் பொதுமக்களில் பலர் அந்த நபரை பிடித்துள்ளனர்.
தோஹோகு வழித்தடத்தை இயக்கும் SBS ட்ரான்சிட் நிறுவனம் இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் தனது ஊழியர் ஒருவரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. சம்பவ இடத்தில் ஒருவர் தரையில் அடக்கப்பட்டு கொண்டிருந்தார். மேலும் பொதுமக்களில் பலர் அங்கு இருந்தனர். இந்த சம்பவத்தில் சட்டவிராத செயல் நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்டதால் ஊழியர்கள் உடனடியாக காவல்துறையை அழைத்து தகவல் தெரிவித்து உள்ளனர்.
டோபி காட் MRT ரயில் நிலையத்துக்கு முகவரியான 11 ஆர்ச்சர் சாலையில் மே 15ஆம் இரவு சுமார் 10:05 மணி அளவில் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக அழைப்பு வந்தது என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்தபோது அவர் அதை மறுத்துவிட்டார் எனவும் காவல்துறை கூறியுள்ளது.
வேண்டுமென்றே துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் அவர் காவல்துறைக்கு ஒத்துழைத்து வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.