புக்கிட் பாஞ்சாங் LRT ரயில் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

புக்கிட் பாஞ்சாங் LRT ரயில் சேவைகள் பாதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்: புக்கிட் பாஞ்சாங் LRT நிலையத்தில் இன்று (மே 18) காலை ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த 68 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் புக்கிட் பாஞ்சாங் தடத்தில் செஞ்சா – புக்கிட் பாஞ்சாங் நிலையங்களுக்கு இடையேயான LRT சேவைகள் பாதிப்புக்குள்ளாகி இருந்தன.

ஆனால் சுவா சூ காங் – புக்கி பாஞ்சாங் நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை ஏற்பாடுகள் வழங்கப்பட்டதாக SMRT தெரிவித்துள்ளது.

இந்த தற்காலிகச் சேவை தடையானது காலை 10:13 மணி அளவில் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பியது.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறையினருக்கு இன்று (மே 18) காலை 5:50 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில் அந்த நபர் காலை 5:00 மணிக்கு தண்டவாளத்தில் விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த மரணத்தில் வேற எந்த நோக்கமும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. மேலும் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK