இச்சம்பவம் குறித்து நேற்று (மே 31) காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புளோக் 225 ஈசூன் ஸ்ட்ரீட் 21-ல் வீடு புகுந்த ஒரு சந்தேகம் நபர் திருடியது குறித்த காலை 9:50 மணி அளவில் தகவல் தங்களுக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
அந்த வீட்டில் இருந்து $520 ரொக்கம், வங்கி அட்டைகள், ஈசி-லிங்க் அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவை திருடப்பட்டு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த விசாரணையை உட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவு மேற்கொண்டது. அதில் காவல்துறைப் பிரிவு, காவல்துறை செயல்பாட்டுத் தளபத்திய மைய அதிகாரிகள், கண்காணிப்புக் கருவிக் காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபர் ஒருவர் அடையாளம் கண்டு பின்னர் புளோக் 744 ஈசூன் ஸ்ட்ரீட் 7-க்கு அருகே கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட வங்கி அட்டைகள், அடையாள அட்டைகள் மற்றும் ஈசிலிங்க் அட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் வீட்டுக் கதவைப் பலவந்தமாக திறக்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு இடுக்கியயும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.