KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

சிங்கப்பூர்: கல்லாங்- பாயா லெபார் விரைவுச் சாலையில் (KPE) ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

விபத்தில் சிக்கிய 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (ஜூன் 4) காலை சுமார் 9:45 மணி அளவில் கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையை நோக்கிச் செல்லும் கல்லாங்- பாயா லெபார் விரைவுச் சாலையில், புவாங்கோக் டிரைவ் வெளியேறும் வழிக்கு முன்பு இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்த தகவல் ஆனது காவல்துறையினருக்கும், சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கும்(SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒரு காரும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்மந்தப்பட்டிருப்பதாக காவல்துறை விசாரணை நடத்தி உறுதி செய்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும், 43 வயதான கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களை SCDF வீரர்கள் சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK