இந்தோனேஷியாவில் குழந்தை கடத்தல்..!! சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகம்..!!

இந்தோனேஷியாவில் குழந்தை கடத்தல்..!! சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகம்..!!

இந்தோனேசியாவில் குறைந்தது 12 குழந்தைகள் தத்தெடுப்பு என்ற பெயரில் சிங்கப்பூருக்கு கடத்தல் கும்பல் மூலமாக அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு குழந்தையும் $17,000 முதல் $21,600 வரை விற்கப்பட்டதாக விசாரணையின் போது கடத்தல் கும்பல் தலைவரான 70 வயது லாய் சியூ லுவான் என்பவர் மூலம் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த 4 பேர் தத்தெடுப்பு முகவர்களாக செயல்பட்டதாக கூறியுள்ளார் தத்தெடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதையும் அவர் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவில் 2022 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை குறைந்தபட்சம் 34 குழந்தைகள் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு விற்றதாக தெரியவந்துள்ளது. தற்போது பாண்டுங்கில் 19 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல் கும்பலானது மிக எளிதாக பாதிக்கப்படும் நிலையில் இருக்கும் பெற்றோரை சமூக ஊடகத்தை பயன்படுத்தி அணுகி அதன் மூலம் குழந்தைகள் கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதன் பிறகு போலியாவணங்களை உருவாக்கி குழந்தைகளை அத்தனைப்பிற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடத்தல் கும்பலின் தலைவரிடம் மே மாதம் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது குறைந்தபட்சம் 12 குழந்தைகளை சிங்கப்பூருக்கு கடத்தியதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

மேலும் இதில் ஈடுபட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த 4 பேர் மீது உடந்தையாக இருந்ததாக கடத்தல் கும்பலின் தலைவர் பாண்டுங் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK