சிங்கப்பூர் மருத்துவ சேவையில் புதிய முன்னேற்றம்..!! நோயாளிகளின் காத்திருப்புக்கு முடிவு..!!
சிங்கப்பூரின் ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை (NTFGH) புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள தானியங்கி செவித்திறன் பரிசோதனை சேவை (Automated Audiometry Service) நோயாளிகளுக்கான மருத்துவ சந்திப்பு காத்திருப்பு நேரத்தைப் பாதி அளவுக்கு மேலாக குறைத்துள்ளது.
ஏப்ரல் மாதம் காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை, கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவமனையில் அதிகாரப்பூர்வமாக இந்த சேவை தொடங்கப்பட்டது.
இது உள்ளூர் மருத்துவ நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தானியங்கி செவித்திறன் பரிசோதனை சேவைகளில் ஒன்றாகும்.
இந்த புதிய அமைப்பு கையடக்க சுயசேவைப் பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்துகிறது. இது பயிற்சி பெற்ற ஒரு பணியாளர் ஒரே நேரத்தில் பல நோயளிகள் கண்காணிக்க அனுமதி அளிப்பதால் செவித்திறன் நிபுணர்களால் ஒருவருக்கு ஒருவர் பரிசோதிக்கப்படும் பாரம்பரிய முறையை இது மாற்றி அமைகிறது.
வழக்கமாக ஆடியோலஜிஸ்ட் (Audiologist) எனப்படும் செவித்திறன் நிபுணர் முன்னிலையில் நடத்தப்படும் பாரம்பரியப் பரிசோதனைக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் இந்த தானியங்கி முறை மூலம் புதிய சந்திப்புக்கான காத்திருப்பு நேரம் 50% க்கும் குறைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடன் எந்த ஒரு கூட்டமும் இல்லாாமல் மிகக்குறுகிய நேரத்திலேயே தங்களது செப வித்திறன் சோதனையை இது மூலம் செய்து முடித்து விடலாம்.
;கணினி வழிகாட்டுதலின்படி ஹெட்ஃபோன் மூலம் மொழிகளை கேட்டு தாங்களேப் பொத்தான்களை அழுத்தி தங்களது பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
கணினியின் மென்பொருள் மூலம் இயக்கப்படும் இந்த சோதனையானது மனித தவறுகள் இன்றி மிக துல்லியமான முறையில் செவித்திறன் வரைபடத்தை (Audiogram) உருவாக்கித் தருகிறது.