ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.?
சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81 ஃப்ளோக் 842 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் ஜூன் 17ஆம் தேதி அன்று 3:35 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தானது வரவேற்பறையில் நிகழ்ந்த மின்கசிவு காரணமாக நடந்து இருக்கலாம் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த வீட்டில் இருந்த 4 பேர் குடும்பத்தில் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மேலும் 40க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தை கவனித்த 18 வயதுடைய அண்டை வீட்டார் ஒருவர் அந்த வீட்டின் குடும்பத்தினருக்கும் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் கொடுத்துள்ளார்.
மின்கலன்களைக் கவனிக்காமல் இரவு முழுவதும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும், தரமான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சிங்கப்பூர் குடிமைப் தற்காப்படை (SCDF) அறிவுறுத்தி உள்ளது.
இந்த விபத்தால் வீட்டின் சுவர்களும் கூரைச் சுவரும் தீயால் கருகிப் போய் இருப்பதையும், ஜன்னல்கள் உடைந்திருப்பதையும் சம்பவம் குறித்த காணொளிகளில் காண முடிகிறது.