சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..?

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..?

சிங்கப்பூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் குளோபல் ஸ்கூல் பவுண்டேஷன்(Global School Foundation) ஜூன் 2026-ல் கடுமையான இணையத் தாக்குதலுக்கு (Cyber Attack) உள்ளாகியுள்ளது.

ஃபுல்கிராம்செக்(FulcrumSec) என்ற ஹேக்கர் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தாக்குதலின் போது சுமார் 4.8 டெராபைட் (TB) அளவிலான தரவுகள் திருடப்பட்டு இருப்பதாக ஹேக்கர்கள் (Hackers) தெரிவித்துள்ளனர்.

அதில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊழியர்களின் கடவுச் சீட்டு (Passport) எண்கள், இல்ல முகவரிகள், மின்னஞ்சல், சம்பள விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை அடங்கும்.

பல நாடுகளில் அமைந்துள்ள க்ளோபல் ஸ்கூல்ஸ் குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் இதனால் தற்பொழுது பாதிப்படைந்துள்ளன.

தகவல் திருட்டு குறித்து அறிந்ததும் நிறுவனம் வெளிப்புற நிபுணர்களின் உதவியுடன் நிலைமையை உடனடியாக கட்டுக்கள் கொண்டு வந்துள்ளது.

சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் தனியார் பள்ளிகளை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. அவற்றில் பொங்கோலில் உள்ள குளோபல் இந்தியன் (Global Indian) அனைத்துலகப் பள்ளியும் ஒன்று. இதில் சுமார் 4,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூரின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் (PDPC) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK