ஈசூன் குடியிருப்பில் என்ன நடந்தது..??தீ விபத்தில் 2 பேர் பாதிப்பு..!!

ஈசூன் குடியிருப்பில் என்ன நடந்தது..??தீ விபத்தில் 2 பேர் பாதிப்பு..!!

சிங்கப்பூர்: ஈசூன் பகுதியில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 2 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (ஜூன் 18) காலை ஈசூன் தெரு 81, பிளாக் 844-ல் உள்ள 5-வது மாடியில் படுக்கை அறையில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தையெடுத்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் வாட்டர் ஜெட் ( Water Jets உபகரணங்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

புகையை சுவாசித்த காரணமாக மூச்சு திணறல் மற்றும் லேசான காயங்கள் காரணமாக அந்த வீட்டிலிருந்த 2 பேர் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும், மற்றொருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீ விபத்து ஏற்பட்ட பிளாக்கில் வசித்து வந்த சுமார் 28 குடியிருப்பாளர்களை SCDF மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர்.

தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், வீட்டின் வரவேற்பறையில் இருந்த மின்சார சாதனங்கள் அல்லது PMD பேட்டரி காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தீ விபத்திற்கான சரியான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK