பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்??

பிரிட்டனில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்..!! ஓட்டுநர் பலி..!! பயணிகளின் நிலை கவலைக்கிடம்??

இங்கிலாந்தில் உள்ள பெட்ஃபோர்டு நகருக்கு அருகே 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கோர விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

லண்டனுக்கு வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்ஃபோட்டு பகுதியில் ஜூன் 19ஆம் தேதி அன்று மாலை 5:15 மணியளவில் இந்த மோதலானது நிகழ்ந்துள்ளது.

2 ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

விபத்தில் பயணம் செய்த 80க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 11 பேருக்கும் அதிகமானோர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர காலம மருத்துவக் குழுவினர் மற்றும் வான்வழி ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்துதீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்த விபத்து குறித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து லண்டன் செயின்ட் பான்க்ராஸ் மற்றும் பெட்ஃபோர்டு இடையான அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK