சிங்கப்பூரில் உள்ள நூலகங்கள் தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவிப்பு..!! ஏன்..?? எதற்கு..??
சிங்கப்பூர்: 4300 ஆங் மோ கியோ அவென்யூ 6இல் தற்போது ஆங் மோ கியோ நூலகமானது செயல்பட்டு வருகின்றது.
குவீன்ஸ்டவுன் நூலகம் 1970 ஆம் ஆண்டு முதன்முதலாக செயல்பட தொடங்கியது. 2013ஆம் ஆண்டு அது பாதுகாக்கப்படும்படி அரசு இதழில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இதன் மேம்பாட்டு பணிகளுக்காக நூலகத்தை மூட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்பாக புதுப்பிக்கப்பட்ட புக்கிட் பாத்தோக் நூலகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் அதன் செயல்பாடுகளை தொடங்க உள்ளது.
அங் மோ கியோ மற்றும் குவீன்ஸ்டவுன் அயன் வட்டாரங்களில் உள்ள நூலகங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக தேசிய நூலக வாரியம் ஆனது ஜூன் 22 அன்று அறிவித்திருக்கிறது.
இதனை அடுத்து தற்போது செயல்பட்டு வருகின்ற அங்கு மோ கியோ நூலகமானது ஜூலை 31ஆம் தேதியுடன் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் இந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி அங் மோ கியோ இடத்தில் நூலகம் அங்கு தற்காலிகமாக செயல்படும்.
பசுமை வளாகத்தில் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை நூலக பிரியர்களுக்கு நூலகம் வழங்கும் என்று தேசிய நூலக வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய வளாகத்தில் உயரமான அலமாரிகள் நினைவுச் சின்னங்களை நினைவூட்டம் அம்சங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கு இருக்கும் என்று இதற்கு முன்பு வாரியம் ஆனது கூறி இருந்தது.
புதிய நூலகம் திறக்கும் வரை நான்காம் தளத்தில் உள்ள அங் மோ கியோ கடைத் தொகுதியில் நான்காம் தளத்தில் பிரவுஸ் என் போரோ என்ற வசதியை நூலகப்பெரியர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு இடையே 53 மார்க் ரேட் டிரைவ் இடத்தில் உள்ள குவீன்ஸ்டவுன் நூலகம் ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் அதன் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும். மேலும் புதுப்பிப்பு பணிகள் முடிந்து புதுப்பொலிவுடன் அந்த நூலகமானது 2028 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நூலகங்கள் புதுப்பிக்கும் பணிகளில் சிங்கப்பூரின் ஆக பழைய நூலகத்தின் முகப்பு முழுமையாக பாதுகாக்கப்படும் நூலகத்தின் புதிய வடிவங்களில் குவீன்ஸ்டவுன் சமூகத்தையும் நூலகத்தின் தழுமையான மரபுடைமையையும் எடுத்துக்காட்டும் அம்சம் சேர்த்துக் கொள்ளப்படும் எனவும் சிங்கப்பூர் நூலக வாரியம் கூறியிருக்கிறது.