சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் பரபரப்பு..!! 2 பேர் கைது..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 2) அதிகாலை ஆர்ச்சர்ட் ரோடு மற்றும் புயோங் சாலை சந்திப்பிற்கு அருகே ஒரு வன்முறை சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த சம்பவதில் சம்பந்தப்பட்ட 2 நபரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கான்கார்ட் ஹோட்டல் மற்றும் கேண்டி லவுஞ்ச் இரவு விடுதிக்கு வெளியே உள்ள பகுதியில் அதிகாலை சுமார் 2:45 மணி முதல் 3:00 மணி அளவில் இந்த சண்டை நிகழ்ந்துள்ளது.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்குக் கழுத்தில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது.


சம்பவ இடத்தில் காயமடைந்த 38 வயதுடைய 4 ஆண்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 27 வயது நபர் உட்பட மொத்தம் 5 பேர் சுயநினைவுடன் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆபத்தான ஆயுதங்களால் வேண்டுமென்று காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 25 வயது மற்றும் 27 வயதுடைய 2 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அது குறித்து விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK