சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்: 24 வயதான இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர்,1வயது சிறுவனை உயரமான HDB அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல் விளம்பில் வைத்து, அவனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குழந்தைகள் மற்றும் இளைஞர் சட்டத்தை மீறியதாக இன்று (ஜூலை 8) அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 18ஆம் தேதி அன்று நண்பகல் நேரத்தில், HDB அடுக்குமாடிக் கட்டிடத்தின் 5வது அல்லது 6வது மாடிகளுக்கு இடையில் உள்ள ஜன்னல் விளம்பில், குற்றம் சாட்டப்பட்ட பெண்மணி அந்த சிறுவனை வைத்து அவனுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக அந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவனைப் பாதுகாக்கும் பொருட்டு, சம்பவத்தின் இடம் மற்றும் புகைப்படங்கள் உட்பட, அவனது அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய எந்த ஒரு தகவலையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் இன்று(ஜுலை 8) அந்த வீட்டுப் பணிப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் அவருக்கு $15,000 அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்காக இந்த வழக்கு ஜூலை 23ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்ச தண்டனையாக $8,000 அபராதம் அல்லது 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.