சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பின் (NDP 2026) முன்னோட்ட மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை முன்னிட்டு, ஜூலை மாதத்தின் கடைசி 3 சனிக்கிழமைகளில் 6 பொது பேருந்து சேவைகள் வழிமாற்றி விடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

சேவை மாற்ற தேதிகள்:
ஜூலை 11, 2026
ஜூலை 18, 2026
ஜூலை 25, 2026

10,11,14,16,70/70M மற்றும் 196 ஆகிய பேருந்துகள் மாற்றத்திற்கு உள்ளாகும் பேருந்து சேவைகள் ஆகும்.

பேருந்து எண் 11 : மாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை ஸ்டேடியம் புலவார்ட்(Statium Boulevard), ஸ்டேடியம் கிரெசென்ட்(Stadium Crescent), ஸ்டேடியம் வாக்(Statium Walk) ஆகிய நிறுத்தங்களைத் தவிர்க்கும்.

 


பேருந்து எண்கள் 10, 14,16, 70/70M, 196: மதியம் 2:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை நிக்கல் ஹைவேயில் உள்ள பேருந்து நிறுத்தங்களைத் தவிர்க்கும்.

பாதிக்கப்படும் நிறுத்தங்களில் தேசிய விளையாட்டு அரங்கம், சன்டெக் சிட்டி, சிங்கப்பூர் உள்ளரங்கு விளையாட்டு அரங்கம் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள நிறுத்தங்களும் அடங்கும்.

 

இந்த தேதிகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல திட்டமிடும் பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறும், பேருந்துகளுக்கு பதிலாக MRT ரயில் சேவைகளைப் பயன்படுத்துமாறும் SBS Transit மற்றும் நில போக்குவரத்து ஆணையம் (LTA)தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் (2026) தேசிய தின அணிவகுப்பு 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.