சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது...??
சிங்கப்பூரில் துவாஸ் அவென்யூ 8 என்ற முகவரியில் உள்ள புலம்பெயர் ஊழியர்கள் தங்குமிடக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் ஆனது நேற்று (ஜூலை 8) நண்பகல் சுமார் 11:40 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது மாடியில் உள்ள ஒரு தங்குமிடப் பிரிவின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த சில பொருள்கள் தீப்பிடித்தது இந்த விபத்திற்கு காரணம் என்று பாதுகாப்பு படையினர் என தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் குழாய் சுருளைப் பயன்படுத்தித் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.