சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..??

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..??

சிங்கப்பூரின் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, HTX அலுவலக கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று இணைய படிவம் வழியாக ஒரு மிரட்டல் வந்துள்ளது.

ஜூலை 6 ஆம் தேதி இதே போல நாடாளுமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக பிரதமரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது.

சிங்கப்பூர் காவல்துறையினர் இந்த மிரட்டல் குறித்த தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்த இரண்டு மிரட்டல்களும் பொய்யானது என்பதை உறுதி செய்தனர்.

மேலும் இந்த இரண்டு மிரட்டல்களையும் ஒரே நபர் தான் விடுத்துள்ளார் என்பதையும் போலீஸ் கண்டறிந்தனர்.

கோ ஜியே ஷியாங் என்ற 40 வயதை சேர்ந்த ஆடவர் இந்த இரண்டு மிரட்டல்களையும் விடுத்துள்ளார் என்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜூலை 7 அன்று மிரட்டல் விடுத்த ஆடவரின் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

இது போன்ற தீங்கு விளைவிக்க கூடிய விஷயம் குறித்து பொய்யான தகவலை பரப்பிய குற்றத்திற்காக (Section 268A) அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் செய்த ஒவ்வொரு குற்றத்திற்காகவும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை S$50,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.