DRDO-வின் புதிய சாதனை...!! உலக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் GaN சிப்..!
விஞ்ஞான உலகிலும், பாதுகாப்புத் துறையிலும் வல்லரசு நாடுகளால் கூட எளிதில் சாதிக்க முடியாத ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை, இந்தியாவின் டி.ஆர்.டி. (DRDO) அமைப்பு எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் வெறும் 198 நாடுகளாலும் முடியாத ஒரு தொழில்நுட்பத்தை இந்தியா இன்று தன் சொந்த முயற்சியால் சாத்தியமாக்கியுள்ளது.
பிரான்ஸின் மறுப்பும் இந்தியாவின் தேவையும்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
இதன் மொத்த மதிப்பு சுமார் ₹56,000 கோடி ஆகும். இந்த ஒப்பந்தத்தின் போது, ரஃபேல் விமானங்களில் பயன்படுத்தப்படும் மிகவும் சக்திவாய்ந்த ‘கேலியம் நைட்ரைடு சிப்’ (Gallium Nitride Chip – GaN) தொழில்நுட்பத்தையும் இந்தியா பிரான்சிடம் கேட்டிருந்தது.
அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய இந்த ஜென் (GaN) தொழில்நுட்ப சிப்புகள், பழைய ரேடார் அமைப்புகளை விட 3 முதல் 5 மடங்கு அதிக தூரத்தைக் கண்காணிக்கும் திறன் கொண்டவை. அதாவது, எதிரி நாடு நம்மைப் பார்ப்பதற்கு முன்பாகவே, நாம் அவர்களைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும்.
ஆனால், இது ரஃபேல் விமானங்களிலேயே இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படாத, மிகவும் ரகசியமான ஒரு தொழில்நுட்பம் என்பதால், இதை இந்தியாவிற்கு வழங்க பிரான்ஸ் நாடு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இந்தியாவின் சவாலும் டாக்டர் மீனா மிஸ்ராவின் சாதனையும்: உலகில் வெறும் 6 நாடுகளிடம் மட்டுமே இருந்த இந்த உயர் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க வேறு எந்த நாடும் முன்வரவில்லை. இந்தச் சூழ்நிலையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டது இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ (DRDO).
டி.ஆர்.டி.ஓ அமைப்பில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து அனுபவம் பெற்ற டாக்டர் மீனா மிஸ்ரா அவர்களின் தலைமையில் இதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கின. பல கட்டப் போராட்டங்கள், சோதனைகள் மற்றும் தீவிர உழைப்பிற்குப் பிறகு, டாக்டர் மீனா மிஸ்ரா மற்றும் அவரது குழுவினர் இந்த ‘ஜென் சிப்’ (GaN Chip) தொழில்நுட்பத்தை இந்தியாவில் தயாரித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இதன் மூலம், இந்தத் தொழில்நுட்பத்தைக் கைவசம் வைத்துள்ள 7-வது நாடாக இந்தியா உலக அரங்கில் உருவெடுத்துள்ளது.
பிரான்ஸை முந்திய இந்தியா: இதில் இந்தியர்களைப் பெருமைப்பட வைக்கும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரஃபேல் போர் விமானங்களை தயாரித்த பிரான்ஸ் நாடே, இந்த ஜென் சிப் தொழில்நுட்பத்தை தங்களது விமானங்களில் 2033-ல் தான் பொருத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இந்தியாவோ 2026-லேயே நமது உள்நாட்டுத் தயாரிப்பான ‘தேஜஸ்’ (Tejas) போர் விமானங்களில் இந்த அதிநவீன சிப்பைப் பொருத்தத் தயாராகிவிட்டது.