சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! கார் – 3 பைக்குகள் மோதல்.. 4 பேர் படுகாயம்..!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! கார் - 3 பைக்குகள் மோதல்.. 4 பேர் படுகாயம்..!

சிங்கப்பூர் : சிலேட்டர் விரைவுச்சாலையில் நேற்று(ஆகஸ்ட் 4) காலை ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 4 ) காலை 7:50 மணி அளவில் மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ்அவென்யூ 12 வெளியேறும் சாலைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காலை நேரம் என்பதால் போக்குவரத்து பரபரப்பின் போது ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள் ஒன்றோடு ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகின.


விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினருக்கும் (SCDF), காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காயமடைந்த 2 பேரை கூட் டெக் புவாட் மருத்துவமனைக்கும் மற்ற இருவரை உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இருசக்கர வாகன ஓட்டுர்களில் ஒருவரான 58 வயது நபர் சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் 24 வயது முதல் 31 வயதிற்கு உட்பட்ட மற்ற 2 இரு சக்கர வாகன ஓட்டுநர்களும், ஒரு பயணியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்த புகைப்படங்கள் ஆனது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில் 2 மோட்டார் சைக்கிள், சாலையின் நடுவே விழுந்து கிடப்பதும், பொதுமக்களில் சிலர் அவர்களுக்கு உதவ முன் வந்ததும், போக்குவரத்தை சீரமைப்பதும் அந்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

விபத்து குறித்து சிங்கப்பூர் காவல்துறை தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.