சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!!

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!!

சிங்கப்பூரின் அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள எஸ்சோ பெட்ரோல் நிலையத்தில், 69 வயது ஊழியரின் மரணத்திற்குக் காரணமான 22 வயது ஓட்டுநர் மீது 8 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 6 அன்று அதிகாலை 3:55 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பெட்ரோல் நிரப்ப ஊழியர் தயாரானபோது, ஓட்டுநர் காரின் கதவைத் திறந்தபடியே திடீரென காரைப் பின்னோக்கி இயக்கியுள்ளார்.

திறந்திருந்த கதவு மோதியதில் ஊழியர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 7 அன்று அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்துக்குப் பிறகு, 22 வயது ஓட்டுநரான ரே எங் காரைக் கைவிட்டு, தன் பெண் தோழியுடன் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்தது, போதைப்பொருள் உட்கொண்டு வாகனத்தை இயக்கியது, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, பதிவு செய்யப்படாத/நீக்கப்பட்ட காரை பயன்படுத்தியது, வாகனக் காப்பீடு இல்லாமல் இயக்கியது, முறையான வாகன உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியது, விபத்து நடந்த பின் வாகனத்தில் நிறுத்தாமல் சென்றது, பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வராமல் தப்பியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காரில் பயணித்த 22 வயது பெண்ணை, சட்டவிரோத போதைப்பொருள் உட்கொண்டது மற்றும் போக்குவரத்து விதிகளின் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறைக்தண்டனை அல்லது $10,000 வரை அபதாரம், அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதற்கும் தனியாக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.