குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!!

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!!

மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் நிறுவனங்கள் எதிர்கால தானியக்கமய திட்டங்கள் குறித்து குறைந்த இலக்குகளை கொண்டு உள்ளதாக சிங்கப்பூர் கொள்கை ஆய்வு கழகம் மற்றும் வர்த்தக சம்மேளனதுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களின் அணுகுமுறை தானியக்கமயத்தை ஏற்றதாகவே இருப்பினும் எதிர்கால திட்டங்கள் குறித்து குறைந்த இலக்குகளை சிங்கப்பூர் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்

மேலும் இந்த ஆய்வில் இந்தோனேசியா, கம்போடியா , மலேசியா வியட்நாம், பிலிப்பைன்ஸ், லாவோஸ் ஆகிய நாடுகளும் சிங்கப்பூருடன் ஆய்வில் பங்கேற்றன.

இந்த ஆய்வின் நோக்கமானது , தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வர்த்தகங்கள் பொருளாதார உருமாற்றம், தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கமயமாதல் தானியக்கமயம் போன்றவற்றை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கின்றன என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கே நடத்தப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan