ஆன்லைனில் விற்பனை செய்த போலிப்பொருட்கள் பறிமுதல்..!!!
சிங்கப்பூரில் கடந்த மாதம்(ஜூலை) 24 ஆம் தேதி முதல் இந்த மாதம் (ஆகஸ்ட்) 15ஆம் தேதி வரை குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் உட்லண்ட்ஸ் க்ளோஸ், உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 13, உட்லண்ட்ஸ் அவென்யூ 6 மற்றும் அங் மோ கியோ அவென்யூ 3 உள்ளிட்ட பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 34 முதல் 59 வயது உட்பட்ட மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
டிசைனர் பைகள், பணப்பைகள், சன் கிளாஸ்கள் உள்ள 1,100 க்கும் மேற்பட்ட போலிப்பொருட்களை கைப்பற்றியதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பொருளின் மதிப்பானது 99,00 வெள்ளிக்கு மேல் இருக்கும்.
வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் இந்த குற்றமானது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 1,00,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இது குறித்து மேலும் விசாரணை தொடர்கிறது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.