சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய வணிக மாவட்டத்தில் சிலர் பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளில் மதிய உணவு இடைவேளையின் போது மின்சிகரெட்டை பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் HSA நேற்று(19 ஆம் தேதி) மற்றும் இன்று(20 ஆம் தேதி) பிற்பகல் மத்திய வணிக மாவட்டத்தில் ஐந்து அமலாக்க குழுக்களாக பிரிந்து அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
மேலும் HSA நேற்றும்(19 ஆம் தேதி) இன்றும்(20 ஆம் தேதி) ராஃபிள்ஸ் நகரம் மற்றும் ஹாஜி லேனில் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இரண்டு நாட்களில் 18 பேரை கைது செய்து 82 மின் சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது.
தகவல் கிடைத்ததின் பேரில் அதிகாரிகள் விரைந்து சென்று செயல்பட்டு 10 நிமிடங்களுக்குள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பல ஆண்களும் பெண்களும் தங்கள் மின் சிகரெட்டுகளை அகற்றுவதற்கு முன்பு அணுகி அதை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களுள் அதிகமானோர் அலுவலக ஊழியர்கள். பெரும்பாலானவர்கள் விரைவாக தங்கள் மின்சுகரட்டுகளை ஒப்படைத்து தங்கள் அடையாள அட்டைகளை வழங்கினர் மற்றவர்கள் அந்த இடத்திலேயே அபராதம் செலுத்தினர்.
நடவடிக்கையின் போது வழிப்போக்கர்கள் பார்வையிட்டனர் சிலர் மெதுவாக உற்று நோக்கினர். மற்றவர்கள் முணுமுணுத்துச் சென்றனர்.
மின் சிகரெட் களை பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது கண்டறியப்பட்டால் சட்ட அமலாக்க அதிகாரிகள் உடனடியாக அவர்களை தடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.