சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!பயனர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!! பயனர்களின் நிலை என்ன?

சிங்கப்பூர்: 2018 ஆம் ஆண்டில் முழுவதும் சுமார் 300 SAM கியோஸ்க்குகள் இருந்தன. பயனர்கள் அஞ்சல் பொருட்களை எடை போடவும், முத்திரைகளை வாங்குவோம், பில்களை செலுத்தவும் அனுமதித்துள்ளன. ஆனால் இப்போது இந்த பழக்கமான நீல இயந்திரங்கள் தபால் நிலையங்கள் எம்ஆர்பி நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் இருந்து மறைந்து வருகின்றன.

“இந்த சேவையின் மூலம் கிடைக்கும் நன்மைக்கு நாங்கள் மிகவும் பழகிவிட்டோம் திடீரென்று அது இல்லை என்றால் நிலைமை என்ன?” ஆவது என்று 66 வயது நிர்வாக ஊழியரான திருமதி ஹெலன் எல் கூறினார்

கடந்த வாரம் சிஎன்ஏ ஆறு முன்னால் எஸ்ஏஎம் இடங்களை பார்வையிட்ட போது அது செயல்பாட்டில் இல்லை என்பதை கண்டறிந்தது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, ‘ 1990களில் முதன் முதலில் தொடங்கப்பட்ட சாம் கியோஸ்க்குகள் அவற்றின் சேவை வாழ்க்கையின் முடிவை எட்டியுள்ளன எனவும், இன்றைய நுகர்வோருக்கு ஏற்றவாறு மேம்பட்ட மற்றும் நெகிழ்வான தீர்வுகளுக்கு ஆதரவாக படிப்படியாக அகற்றப்பட்டு வருவதாகவும்’ Singpost நிறுவனம் கூறியுள்ளது.

2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட POPDrop, அதன் சுயசேவை வலையமைப்பின் அடுத்த பரிணாம வளர்ச்சி என்று சிங்க்போஸ்ட் தெரிவித்துள்ளது. தற்போது 36 இடங்களில் இந்த ஜியோஸ்குகள் தபால் லேபிள் அச்சிடுதல், பில் செலுத்துதல், பார்சல் ட்ராப் ஆப்கள் மற்றும் நிகழ நேர கண்காணிப்பு போன்ற செயல்பாடுகளை வழங்கிக் கொண்டு வருகிறது.

வரும் மாதங்களில் இது போன்ற கியோஸ்க்குகளை அதிக அளவில் வெளியிட எதிர்பார்ப்பதாக சிங்போஸ்ட் மேலும் கூறியது.

 

இணையத்தில் எல்லாமே சாத்தியம் என்றான பிறகு அதற்கு மதிப்பு குறைந்துவிட்டது. இப்போதும் சிலர் கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளுக்கு SAM தானியக்க இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதன் பயன் குறைந்து விட்டதாக சிங்போஸ்ட் நிறுவனம் கூறியது எஞ்சியிருக்கும் இயந்திரங்களும் வரும் மாதங்களில் அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan