சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா? ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்
செப்டம்பர் மாதம் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி)அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய தின வார இறுதியின் போது (ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 11 வரை) கிட்டத்தட்ட இரண்டும் இல்லை என் பயணிகள் நிலச் சோதனை சாவடிகளை கடந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
சென்ற மாதம் (ஆகஸ்ட் 2025) 8-ஆம் தேதி ஒரே நாளில் 5,58,000 மேற்பட்ட பயணிகள் கடந்து சென்றனர் என ஆய்வு வெளியிடப்பட்டது.
காரில் பயணம் செய்தவர்கள் 3 மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பயணிகள் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும் படி ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
பயணத்தை தொடங்குவதற்கு முன் நிலச் சோதனை சாவடிகளின் போக்குவரத்து நிலவரத்தை தெரிந்து கொள்வது மேலும் சுமூகமான பயணத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.